எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கியில் 20 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது.திருச்சியில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் ஓட்டல் நடத்தி வந்தது. குத்தகை காலம் முடிந்துவிட்டதால் அந்த இடத்தை கையகப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் ஆஜராகி, எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் குத்தகை காலம் கடந்த 2024 ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. எனவே அவர்களை அந்த இடத்துக்கு தொடர்ந்து உரிமை கோரமுடியாது. மேலும், அந்த நிறுவனம் குத்தகை பாக்கியாக 38 கோடி ரூபாய் வைத்துள்ளது என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய 38 கோடி ரூபாய் குத்தகை பாக்கியில் 20 கோடியை 6 வாரத்தில் செலுத்த எஸ்.ஆர்.எம் குழுமத்துக்கு உத்தரவிட்டனர். அந்த தொகையை முதலில் செலுத்தினால்தான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து, 20 கோடி ரூபாயை செலுத்தியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
பஞ்சாப்பிலும் காலை உணவு திட்டம்… அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்…
