மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்து விஜயை வரவேற்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்துள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், விஜய் அவர்களின் வருகையை ஒட்டி பெரும் திரளான ரசிகர்கள் கூடினதால் பரபரப்பு நிலவியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற உள்ள தேர்தல் பரப்புரைக்காக சென்ற அவர், வழியிலேயே பல இடங்களில் உற்சாக வரவேற்பைப் பெற்றார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக தனது பிரச்சார வாகனத்தில் காரைக்குடி நோக்கி பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது மேலூர் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் மதுரை வீரன் தலைமையில் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து விஜயை காண முயன்றனர். ரசிகர்கள் சிலர் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் அவர்களின் புகைப்படங்களை விஜய்க்கு வழங்க, அவர் அதை மரியாதையுடன் பெற்றுக்கொண்டார். மேலும், அவரது வாகனத்தைச் சுற்றி இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் தொடர்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஒழுங்குமுறைகளின் ஒரு பகுதியாக, விஜயின் வாகனத்தை சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒன்றிய தொழிலக பாதுகாப்பு படை (CISF) வீரர்களுடன் சுங்கச்சாவடியில் தயார் நிலையில் இருந்தனர். எனினும், விஜய் தனது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் சோதனை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
விஜய் வருகையை முன்னிட்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காரைக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜயை நேரில் கண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக ரசிகைகள் தெரிவித்தனர்.
முதல்வரின் சொத்து மதிப்பை விட விஜய்யின் சொத்து பலமடங்கு அதிகம் – மிரள வைக்கும் தவெக கோடீஸ்வரர்கள்
