Homeசெய்திகள்ஒரே மாதத்தில் அங்கன்வாடியில் 16,800 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்... கல்வி- வயது முழு விவரம்...

ஒரே மாதத்தில் அங்கன்வாடியில் 16,800 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்… கல்வி- வயது முழு விவரம் இதோ…

-

- Advertisement -

அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், சத்துணவு பணியாளர்கள் இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மலையம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும், காலியாக உள்ள பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பினார்.

அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும் என்று கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு விட்டதால் இன்னும் ஒரே மாதத்தில் நியமனங்கள் நடைபெறும்  என்று அவர் கூறினார். 7,900 அங்கன்வாடி பணியாளர்கள், 8,900 சத்துணவு சமையல் ஊழியர்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

1. பணியின் பெயர்: அங்கன்வாடி பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.7,700 – 24,200/-
காலியிடங்கள்: 3,886

கல்வி தகுதி: 12ம் வகுப்பு

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: குறு அங்கன்வாடி பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.5,700 – 18,000/-

காலியிடங்கள்: 305

கல்வி தகுதி: 12ம் வகுப்பு
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: அங்கன்வாடி உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.4,100 – 12,500/-

காலியிடங்கள்: 3,592

கல்வி தகுதி: 10th

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

குறிப்பு: பட்டியல், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

MUST READ