
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடூரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளது.
போலி இறப்பு சான்றிதழ்! பத்திரப்பதிவில் தில்லாலங்கடி!! வசமாக சிக்கிய எம்.எல்.ஏ மகன்
மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்தி மோடி, “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். மழைக்காலக் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என தாம் நம்புகிறேன். பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நிறைவேற்றப்படும் சட்டங்களை ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் வலுவாக்கும். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இந்திய மக்களின் முக்கியமான மசோதாவான தகவல் பாதுகாப்பு மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவங்களால் எனது இதயம் கனத்துள்ளது. மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையைக் கொடுத்துள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
அனைத்து மாநில முதல்வர்களும் இந்திய பெண்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.