Homeசெய்திகள்இந்தியாசென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த அலைன்ஸ் ஏர் விமானம்

சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த அலைன்ஸ் ஏர் விமானம்

-

- Advertisement -

சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த அலைன்ஸ் ஏர் விமானம்

சென்னையில் பலத்த மழை காரணமாக, ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன், சென்னையில் தரையிறங்க வந்த அலைன்ஸ் ஏர் பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல், மீண்டும் ஹைதராபாத்துக்கே திரும்பிச் சென்றது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம், 72 பயணிகளுடன் இன்று பகல் 12 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது. அந்த நேரத்தில் சென்னை விமான நிலைய பகுதியில், பலத்த மழை கொட்டியபடி, மோசமான வானிலை நிலவியது. இதையடுத்து விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது.

ஆனாலும் வானிலை சீரடையாத காரணத்தால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானத்தை, மீண்டும் ஹைதராபாத்துக்கே திருப்பி அனுப்பினர்.

இதை அடுத்து ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த அந்த விமானம், சென்னையில் மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல், மீண்டும் கைதரபாத்துக்கு திரும்பி சென்று தரை இறங்கி உள்ளது.

தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவிற்கு ஐகோர்ட் உத்தரவு!

MUST READ