Homeசெய்திகள்இந்தியாஉ.பி.யில் பிக்கப் வேன் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலி!

உ.பி.யில் பிக்கப் வேன் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலி!

-

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தி ல் உள்ள ரொட்டி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிக்கப் வாகனத்தில் அலிகாருக்கு சென்று கொண்டிருந்தனர். புலந்த்சாஹர் மாவட்டத்தில் பூடான் – மிரட் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து பிக்கப் வேனின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பிக்கப் வேனில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அலிகார் மற்றும் புலந்த்சாகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதி த்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

MUST READ