வடமாநிலங்களை கடுமையாக தாக்கியுள்ள பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நிலவிவரும் கடும் பனிபொழிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமான பனிமூட்டம் சூழ்ந்ததால் விமான, ரயில் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல நீண்ட தூர ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சில ரயில்கள் பல மணி நேர தாமதத்துடன் வந்தடைந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாலைகளில் காணப்படும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் பார்வை இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, விபத்து அபாயம் உருவாகியுள்ளது.
இதனிடையே, டெல்லியில் காற்று மாசு அளவு 400-ஐ எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ‘மிகவும் மோசமான’ நிலை என வகைப்படுத்தப்படுவதால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறை… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…


