Homeசெய்திகள்இந்தியாவயநாட்டில் கனமழைய காரணாமாக பயங்கர நிலச்சரிவு - 20 பேர் பலி

வயநாட்டில் கனமழைய காரணாமாக பயங்கர நிலச்சரிவு – 20 பேர் பலி

-

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் அங்கு ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல் மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சூரல் மலை பகுதியில் பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 500 குடும்பங்கள் அங்கு சிக்கி அதில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்காக தற்போது கேரள மாநிலத்தின் உடைய தீயணைப்பு துறையினர் பலர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதே போல தேசிய பேரிடர் மீட்பு படையும் அங்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் ராணுவத்தின் உதவியும் அங்கு நாடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக சூலூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் உதவியும் கோரப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலச்சரிவில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவானது வயநாடு அருகே அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தொடர் மழையால் கேரளா மாநிலம் முண்டகை – சூரல் மலை பகுதியில் உள்ளிட்ட பகுதிகள் மண் சரிவு ஏற்பட்டதின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் சூரல் மாலா பாலம் அதிக வெள்ளத்தின் காரணமாக அடித்து செல்லப்பட்டதால் பணி செல்லும் வீரர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் மேலும் தீயணைப்புத் துறையினர் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபடும் போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாகவும் இதனால் ஏராளமான வாகனங்கள் அடித்து செல்லப்பட்டனர். மேலும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததாக பேரிடர் மீட்பு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

MUST READ