Homeசெய்திகள்இந்தியாகாட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயம்..

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயம்..

-

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக , டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து பல்வேறு சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டன. அதில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனனும் வெள்ளத்தில் சிக்கியது. அதிலிருந்த 23 வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து மாயமான ராணுவ வீரர்களை தேடும் பணியில் இந்தோ – திபெத் எல்லை காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயம்..

இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், வெள்ளத்தில் சிக்கிய 23 வீரர்கள் காணமல் போயுள்ளனர் என்றும், சில வாகனங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் , கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ள மாவட்ட நிர்வாகம், அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

MUST READ