
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், மக்களவைச் செயலகத்தால் இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

‘லியோ’ படத்தின் திரிஷா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கொலை முயற்சி வழக்கில் முகமது பைசல் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததுடன், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவு யூனியன் பிரதேச கவராத்தி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, முகமது பைசலைத் தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்தது.
பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியின் லூசிபர் 2…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அமர்வு நீதிமன்றத் தீர்ப்புக்கு கேரள மாநில உயர்நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்திருந்தது. இதனால் தகுதி நீக்க நடவடிக்கை ரத்துச் செய்யப்பட்டதால் முகமது பைசல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
கேரள மாநில உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்காலிக தடை உத்தரவை ரத்துச் செய்ததுடன், பைசலின் மனுவை மீண்டும் விசாரிக்க கேரள உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
சிலிண்டர் விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!
இதையடுத்து, முகமது பைசலின் மனுவை மீண்டும் விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பைசல் குற்றவாளி என அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிச் செய்து உத்தரவிட்டது. இரண்டாவது முறையாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, முகமது பைசலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.