spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகாஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 4 வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 4 வீரர்கள் உயிரிழப்பு

-

- Advertisement -

ஜம்மு – காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

we-r-hiring

ஜம்மு- காஷ்மீர் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பயீன் பகுதியில் இன்று பிற்பகல் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பந்திபோரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு வீரர் உயிரிழந்தார். இதனை அடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.  படுகாயமடைந்த மற்ற ராணுவ வீரர்கள் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

MUST READ