Homeசெய்திகள்இந்தியாஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

-

 

ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கணிப்பு வெளியானது!
File Photo

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.

ராஜஸ்தான் மாநிலம்:

ஜன் கீ பாத் வெளியிட்டு கருத்துக் கணிப்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்த 199 இடங்களில் பா.ஜ.க. 100 முதல் 122 இடங்களை பெறலாம். காங்கிரஸ் கூட்டணி 62 முதல் 85 இடங்களையும், மற்றவை 14 முதல் 15 இடங்களையும் பெறும்.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 86 முதல் 106 தொகுதிகளையும், பா.ஜ.க. 80 முதல் 100 தொகுதிகளையும், மற்றவை 9 முதல் 18 தொகுதிகளையும் கைப்பற்றும். CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பா.ஜ.க 115 தொகுதிகளையும், காங்கிரஸ் 71 தொகுதிகளையும், மற்றவை 13 தொகுதிகளையும் கைப்பற்றும்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்…. இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

மத்திய பிரதேசம் மாநிலம்:

Republic TV வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.க. 118 முதல் 130 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 97 முதல் 107 தொகுதிகளையும் கைப்பற்றும். CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பா.ஜ.க. 116 தொகுதிகளையும், காங்கிரஸ் 111 தொகுதிகளையும் மற்றவை 3 தொகுதிகளையும் கைப்பற்றும்.

சத்தீஸ்கர் மாநிலம்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 40 முதல் 50 தொகுதிகளையும், பா.ஜ.க. 36 முதல் 46 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 49 தொகுதிகளையும், பா.ஜ.க. 38 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 3 தொகுதிகளையும் கைப்பற்றும். Republic TV வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 44 முதல் 52 தொகுதிகளையும், பா.ஜ.க. 34 முதல் 42 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 2 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது.

மணத்தி கணேசனின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

தெலங்கானா மாநிலம்:

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் பி.ஆர்.எஸ். 58 தொகுதிகளையும், காங்கிரஸ் 56 தொகுதிகளையும், பா.ஜ.க. 10 தொகுதிகளையும் கைப்பற்றும். Republic TV வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பி.ஆர்.எஸ். 46 முதல் 56 தொகுதிகளையும், காங்கிரஸ் 58 முதல் 68 தொகுதிகளையும், பா.ஜ.க. 4 முதல் 9 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் 5 முதல் 7 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலம்:

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ZPM 15 முதல் 25 தொகுதிகளையும், MNF 10 முதல் 14 தொகுதிகளையும், காங்கிரஸ் 5 முதல் 9 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ