
மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை நடுவானில் தேள் கொட்டியது நிகழ்வு அரங்கேறியுள்ளது.

எல்லா மொழிலயும் நானே பேசி அசத்துறேன்… அதிரடியா களமிறங்கிய விஷால்!
ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று டாடா குழுமத்துக்கு (TATA Group) சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் (Air India) AI 630 என்ற எண் கொண்ட விமானம், நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது, நடுவானில் பெண் பயணியை தேள் கொட்டியது. இதனால் அவர் வலியால் அலறித் துடித்துள்ளார். விமானம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாகத் தரையிறங்கியதும், அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் பயணி அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பழங்கால நங்கூரம்!
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா விமானம், “பயணிக்கு நடந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது. எங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் பயணியுடன் மருத்துவமனைக்கு சென்றனர். டிஸ்சார்ஜ் செய்யும் வரை பயணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கினர்” எனத் தெரிவித்துள்ளது.