spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் – பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

-

- Advertisement -

திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் – பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Image

திருப்பதியில் நடைபாதையில் ஆறு வயது சிறுமி ரட்ஷிதாவை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து இன்று காலை பிடிக்கப்பட்டது. அதே இடத்தில் அருகில் தற்பொழுது மீண்டும் ஒரு சிறுத்தை வந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் நடந்து சென்ற பக்தர்கள் அலறி அடித்து சத்தம் போட்டதால் சிறுத்தை அங்கிருந்து ஓடியது. இதனால் நடை பாதையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

சிறுத்தை

இன்று காலையில் ஒரு சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ