Homeசெய்திகள்இந்தியா"மன்னிப்புக் கோர முடியாது"- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!

“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!

-

 

"ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்"- ராகுல் காந்தி பேச்சு!
Photo: ANI

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்புக் கோர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!

சிறைத்தண்டனையை எதிர்த்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை (ஆகஸ்ட் 04) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை என்றும், மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றால் முன்னதாகவே செய்திருப்பேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கார் சந்தையில் மாருதி சுசுகியின் பங்கு 43.3% ஆக அதிகரிப்பு!

அத்துடன், தன் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென கோரியுள்ள ராகுல் காந்தி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ