spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅயோத்தி ராமர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

அயோத்தி ராமர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

-

- Advertisement -

 

அயோத்தி ராமர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

we-r-hiring

அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்ட முதல் தினத்திலேயே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தியில் காத்திருப்பதால் அடுத்த சில நாட்களுக்கும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ராமராஜன் பட நாயகி

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். காலையில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களை சமாளிக்க காவல்துறையினர், கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

காலையில் ஒரு மணி நேரம் என்று இருந்த கோயில் தரிசனத்திற்கான காத்திருப்பு நேரம் பின்னர் படிப்படியாக அதிகரித்து, மதியம் தரிசனம் செய்ய சென்றவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கோயிலுக்கு அருகில் உள்ள சாலைகளில் பக்தர்கள் அலை அலையாகத் தொடர்ந்து வந்ததன் காரணமாக, வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து

ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளதாக அயோத்தி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் தரிசனத்திற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ