Homeசெய்திகள்இந்தியாஅயோத்தி கோயில் அருகே நிலம் வாங்கிய பாலிவுட் நடிகர்!

அயோத்தி கோயில் அருகே நிலம் வாங்கிய பாலிவுட் நடிகர்!

-

 

அயோத்தி கோயில் அருகே நிலம் வாங்கிய பாலிவுட் நடிகர்!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 14.5 கோடி ரூபாய் ஆகும்.

தனுஷின் 51வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த வீட்டு மனை மேம்பாட்டு நிறுவனமான அபிநந்தன் லோதா, ராமர் கோயில் அருகே சுமார் 51 ஏக்கரில் சறைவு என்ற வீட்டு மனை திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த வீட்டு மனையில் இருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சுமார் 10,000 கனஅடி நிலத்தை வாங்கியிருப்பதாகவும், அதன் மதிப்பு ரூபாய் 14.5 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், குடியிருப்புகளும் வரும் 2028- ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்க மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமிதாப் பச்சன் நிலம் வாங்கியிருக்கும் இடம், ராமர் கோயிலில் இருந்து சுமார் 15 நிமிடங்களில் செல்லும் தூரத்திலும், அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

சிரஞ்சீவி நடிக்கும் மெகா 156 ….. டைட்டில் வெளியீடு!

இந்த இடத்தில் விரைவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், வீடு கட்டவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ