spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் இன்று திறப்பு!

அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் இன்று திறப்பு!

-

- Advertisement -

 

"தீமையை நன்மை வென்றதன் அடையாளம் தசரா"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
File Photo

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள புதிய விமான நிலையம், ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.30) திறந்து வைக்கிறார்.

we-r-hiring

வௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழு

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் அடுத்தமாதம் திறக்கப்படும் நிலையில் விமான நிலையம், ரயில் நிலையம் இன்று (டிச.30) திறக்கப்படவுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் வரை வாகன பேரணியாகச் செல்கிறார்.

இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள், ஆறு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ‘மகரிஷி வால்மீகி’ என பெயரிடப்பட்ட விமான நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.

அயோத்திக்கு ரூபாய் 11,000 கோடி, பிற மாவட்டங்களுக்கு ரூபாய் 4,600 கோடி நலத்திட்டங்களை இன்று (டிச.30) தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோல், அயோத்தி ராமர் கோயிலுக்கு ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ராமஜென்ம பூமி பாதை ஆகிய நான்கு பாதைகளையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

மனசாட்சியே கிடையாதா…? அஜித்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….ஏன் தெரியுமா?

பிரதமரின் வருகையையொட்டி, அயோத்தி முழுவதும் துணை ராணுவப் படையினர், மாநில காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காகக் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ