Homeசெய்திகள்இந்தியாகாவிரி நீர் பங்கீட்டு வழக்கு: "20 டி.எம்.சி பற்றாக்குறை; ஆணையம் தமிழக கோரிக்கையை மதிப்பதில்லை" —...

காவிரி நீர் பங்கீட்டு வழக்கு: “20 டி.எம்.சி பற்றாக்குறை; ஆணையம் தமிழக கோரிக்கையை மதிப்பதில்லை” — உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி வாதம்!

-

- Advertisement -

காவரி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகித் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து காரசாரமான வாதங்களை முன்வைத்தார்.காவிரி நீர் பங்கீட்டு வழக்கு: "20 டி.எம்.சி பற்றாக்குறை; ஆணையம் தமிழக கோரிக்கையை மதிப்பதில்லை" — உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி வாதம்!

சாகுபடி இழப்பும், 20 டி.எம்.சி பற்றாக்குறையும்
தமிழகத்திற்கு உரிய நீர் திறக்கப்படாத காரணத்தால், ஏற்கனவே ஒரு குறுவை/சம்பா சாகுபடியைத் தமிழக விவசாயிகள் இழந்துள்ளனர். விகிதாச்சார அடிப்படையில் நீர் கணக்கிடப்பட்டால் தமிழகத்திற்கு இன்னும் 20 டி.எம்.சி நீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நீரைப் பெறாவிட்டால் அடுத்தகட்ட பயிர் சாகுபடியையும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

we-r-hiring

படிப்படியாகக் குறைக்கப்பட்ட நீர் அளவு
காவரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனச் சுட்டிக்காட்டிய தமிழக அரசு, ஆணையம் நீரின் அளவைப் படிப்படியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளதை எடுத்துக் கூறியது:

முதலில்: வினாடிக்கு 12,000 கன அடி வீதம் திறக்க உத்தரவு.

அடுத்த கூட்டத்தில்: அது 9,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

தற்போது: மேலும் குறைக்கப்பட்டு 6,000 கன அடியாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மீது குற்றச்சாட்டு
தமிழகத்தின் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழக அரசு வைக்கும் நியாயமான கோரிக்கைகளைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சிறிதும் கருத்தில் கொள்வதில்லை. பற்றாக்குறை நீரைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக எந்தவொரு தீர்க்கமான முடிவையும் ஆணையம் எடுப்பதில்லை; இது தமிழகத்திற்குப் பெரும் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

கர்நாடக அரசு நீர் மடைமாற்றம்
கர்நாடக அரசு தன் கைவசம் உள்ள அணைகளில் நீரைத் தேக்கி வைப்பது மட்டுமின்றி, சட்டவிரோதமாகக் குளம் மற்றும் தடுப்பணைகள் மூலமாகச் சுமார் 19 டி.எம்.சி நீரை மடைமாற்றம் செய்து சேமித்து வருகிறது என்றும், இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் தடுக்கப்படுவதாகவும் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

எனவே, தமிழகத்தின் விவசாயத்தைக் காக்கப் பற்றாக்குறை நீரை உடனடியாகத் திறந்துவிடக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் ஆணையத்தில் பிளவா? தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் மறுதேர்தல் நடத்த வேண்டும் – உத்தவ் தாக்கரே!

MUST READ