பாகிஸ்தான் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற நிலையில் பயங்கரவாதத்தை முழுமையாக கொடுக்கும் வரை பாகிஸ்தான் மீது இராஜாங்க ரீதியான நடவடிக்கை தொடரும் என மத்திய அரசு அறிவித்தது. ஏற்கெனவே சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முக்கியமான முடிவுகளை எடுத்துள்ள மத்திய அரசு இப்போது பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில், 1992 வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும் மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு பொருந்தும் என தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவானது தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கை நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதாகவும், தடை உத்தரவில் ஏதேனும் விதிவிலக்கு இருந்தால் மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாதது ஏன்? – இராமதாஸ் கேள்வி