உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 கிலோ தானியங்களை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற பெயரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கோதுமை, அரிசி, ஐந்து கிலோ தானியங்களை நிறுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
The discontinuation of PMGKAY hurts the poor & benefits only the Modi govt.
CM Modi who opposed NFSA – his letter is attached – now claims credit for this pro-poor UPA policy as PM.
U-Turn Ustad strikes again.
1/n pic.twitter.com/JT7H3FPYea
— Jairam Ramesh (@Jairam_Ramesh) January 3, 2023

அதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஐந்து கிலோ தானியங்களை நிறுத்துவதன் மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகலாம் என்றும் ஆனால் ஏழைகளின் மாதாந்திர உணவுச் செலவு அதிகரித்து விடும் என்றும் ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.


