Homeசெய்திகள்இந்தியாமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு- அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு- அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

-

 

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!
File Photo

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21- ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கைது நடவடிக்கை தேர்தல் பரப்புரையில் இருந்து தடுப்பதற்காகவே என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வரும் ஏப்ரல் 24- ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், அதற்கு வரும் ஏப்ரல் 26- ஆம் தேதிக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு விளக்க மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் ஏப்ரல் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மம்மூட்டி நடிப்பில் டர்போ… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

MUST READ