spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!

-

- Advertisement -

 

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!

we-r-hiring

ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, விஜயவாடாவில் பேருந்தில் பரப்புரை பயணம் மேற்கொண்டார்.

இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை – மோடி!

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பேருந்தின் மீது ஏறி பேசத் தொடங்கிய போது, கட்சித் தொண்டர்கள் கிரேன் மூலம் அவருக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைக் குறி வைத்து கற்களை வீசியுள்ளார்.

அதில் ஒரு கல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெற்றியின் மீது பட்டு ரத்தம் வடிந்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அவருடன் வந்த எம்.எல்.ஏ. வெல்லம்பள்ளி சீனிவாசன் காயமடைந்தார். உடனடியாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் பரப்புரை மேற்கொண்டார்.

‘ரூபாய் 1- க்கு சானிட்டரி நாப்கின் முதல் புல்லட் ரயில் சேவை வரை’- பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகள்!

இதனிடையே, முதலமைச்சர் ஜெகன்மோகன ரெட்டி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

MUST READ