Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்றத்தில் நடைபெறும் நாடகம் - 2029 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

நாடாளுமன்றத்தில் நடைபெறும் நாடகம் – 2029 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

-

- Advertisement -

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மூலம்  ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் நாடகம் - 2029 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட அந்தத் திடீர் பிடிவாதத்தைப் போலவே. செல்லாத நோட்டுகளை அறிவித்துவிட்டுப் பிறகு வருந்தியதைப் போலவே, நரேந்திர மோடி அரசாங்கம் தற்போது திடீரென மூன்று மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது. எந்த ஆலோசனையும் இல்லை, முழுமையான எந்த தகவல்களும் இல்லை; அதுவும் ஒரு பரபரப்பான தேர்தல் காலக்கட்டத்தில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்படுகிறது.

we-r-hiring

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை, புதிய தொகுதி மறுவரையறையுடன் இணைத்து, பாஜக பெரும் திட்டத்தை வகுக்க தொடங்கியுள்ளது. இந்த மூன்று மசோதாக்களையும் நிறைவேற்றுவதனால் மாநிலங்களிலும் நாடாளுமன்றத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுகுறித்து ​கடந்த சில நாட்களாகப் பாஜகவினரால் பரப்பப்படும் சில பொதுவான வதந்திகளை இங்கே  விரிவாக பார்ப்போம்

சந்தேகம்- 1: இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்.

இதில் உண்மையில்லை

”பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் 2023-ஆம் ஆண்டிலேயே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள இந்த மசோதா ஒரு திடீர் தன்னிச்சையான முடிவு மட்டுமே.”

சந்தேகம் -2: இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தால், நாம் பெண்கள் இடஒதுக்கீட்டைத் தவறவிட்டு விடுவோம்.

இல்லை

”இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தாலோ அல்லது திரும்பப் பெறப்பட்டாலோ எதுவும் மாறாது. பெண்கள் இடஒதுக்கீடு என்பது ஏற்கனவே சட்டமாகிவிட்டது. 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் வந்தவுடன் அது நடைமுறைக்கு வரும்.”

சந்தேகம் -3: தொகுதி மறுவரையறை (மக்கள் தொகை அடிப்படையில்) எந்த மாநிலத்தையும் பாதிக்காது.Drama,Parliament,BJP,Preparing,2029,Elections,

இது தவறு

”பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மக்களவையில் தங்களது செல்வாக்கை (விகிதாச்சார அடிப்படையில்) இழக்கும்.”

​இந்தி பேசும் மாநிலங்கள்: உபி, பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் இடங்கள் 207-லிருந்து 336 ஆக (77%) உயரும்.

​தென்னிந்திய மாநிலங்கள்- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் இடங்கள் 132-லிருந்து 176 ஆக (வெறும் 33%) மட்டுமே உயரும். இதனால் தேசிய அரசியலில் தெற்கின் குரல் நசுக்கப்படும்.”

நாடாளுமன்றத்தில் நடைபெறும் நாடகம் - 2029 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

​சந்தேகம்-4: அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் அதிகரிக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லப்படுகிறதே?

​இது ஒரு திசைதிருப்பும் செயல் (Red Herring).

அப்படி எதுவும் மசோதாவில் இல்லை.  “ஆதாரங்கள்” வேண்டும் … வாய்மொழியில் சொல்வதை நம்ப முடியாது. அப்படியே 50% அதிகரித்தாலும், மொத்த எண்ணிக்கையில் வட மாநிலங்களின் ஆதிக்கமே ஓங்கும்.”

சந்தேகம்-5: தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து பிரிப்பதில் என்ன தவறு?

​இதில் எல்லாமே தவறுதான்

இதுவரை அரசியலமைப்பின்படி ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு வெளிப்படையாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது “நாடாளுமன்றம் சட்டப்படி தீர்மானிக்கும் மக்கள் தொகை” என்று மாற்றுவது, ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப தொகுதிகளை மாற்ற வழிவகுக்கும். இது பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும்.

சந்தேகம்-6: எல்லா தொகுதிகளையும் ஒரே அளவில் (மக்கள் தொகை அடிப்படையில்) மாற்றுவதில் என்ன சிக்கல்?

​இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டித்து, மக்கள் தொகையை நிலைப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு (பெரும்பாலும் பாஜாக ஆதரவு மாநிலங்கள்) கூடுதல் இடங்களை வழங்குவது ஜனநாயகத் துரோகம். நிதி ஆணையம் கூட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது, ஆனால் இந்த மசோதா அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது.

சந்தேகம் – 7: மிகப்பெரிய மக்களவை உருவாவது நல்லதுதானே?

​இல்லை

”மக்களவை 850 இடங்களாக உயர்ந்தால், அது மாநிலங்களவையை விட 3.3 மடங்கு பெரியதாகிவிடும். ​இதனால் மாநிலங்களின் குரலாக விளங்கும் மாநிலங்களவை (Rajya Sabha) தன் வலிமையை இழக்கும். ​நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆளுங்கட்சி எந்த மசோதாவையும் எளிதாக நிறைவேற்றிவிடும்.

​பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தருவதால் தங்களுக்கு அதிகாரம் குறைந்துவிடுமோ என அஞ்சும் சக்திவாய்ந்த ஆண் அரசியல்வாதிகளை (Bahubalis) சரிக்கட்டவே, மொத்த இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி அவர்களுக்கும் இடம் கிடைக்க மோடி அரசு வழிவகை செய்கிறது.

சந்தேகம்-8: மோடி ‘மக்கள் தொகை வெடிப்பு’ பற்றிப் பேசினாரே, பிறகு ஏன் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களுக்குப் பரிசளிக்கிறார்?

​இது முற்றிலும் முரணானது

2019 மற்றும் 2020 சுதந்திர தின உரைகளில் “மக்கள் தொகை கட்டுப்பாடு ஒரு தேசபக்தி” என்றார் மோடி. ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறார். ஒருவேளை ‘மக்கள் தொகை வெடிப்பு’ பற்றிய அவரது முந்தைய பேச்சுகள் குறிப்பிட்ட சமூகங்களை நோக்கமாகக் கொண்ட அரசியல் பேச்சுகளாக மட்டுமே இருந்திருக்கலாம்.

இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம். பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று போலியான நாடகத்தை நடத்திவிட்டு, 2029 தேர்தலில் வெற்றிப்பெற இப்போதே திட்டத்தை வகுக்க தொடங்கிவிட்டார்கள்.

தேசப்பற்று பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் – தொகுதி மறுவரையறையை ஆதரித்து பிரதமர் மோடி பேச்சு

MUST READ