மைசூரு பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து
மைசூரு நகரில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
மைசூர் நகர் ஹூப்ளி தொழில் பூங்கா இருக்கிறது. இந்த தொழில் பூங்காவில் ஒரு தனியார் பட்டாசு குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கி வைக்கப்பட்டு இருந்தன.
அந்த குடோன் முழுவதுமாக எரிந்து வெடித்து தரைமட்டமாக ஆகி இருக்கிறது. வெடி விபத்து காரணமாக 2 கிலோமீட்டர் தொலைவிற்கு புகை சூழ்ந்துள்ளதால் பெரும் பாதிப்பு இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் இதை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன. வெடி விபத்தின் காரணமாக கடுமையான சேதத்தை சந்தித்திருக்கின்றன.
தற்பொழுது வரை இந்த குடோனில் எத்தனை பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதை சுற்றி எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பொதுமக்கள் பலர் இந்த கட்டிடத்திற்குள் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
மைசூர் நகரில் உள்ள சுமார் 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க இன்னும் பல மணி நேரமாகும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் தீ விபத்து காரணமாக அனைத்து இடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களும் இந்த விபத்தை உணர்ந்திருக்கிறார்கள். அந்த அளவு பயங்கர வெடி விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.