Homeசெய்திகள்இந்தியாஅமலாக்கத்துறை அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து!

-

- Advertisement -

மும்பை அமலாக்கத்துறை அலுவலக தீவிபத்தில் மெகுல் சோக்சி, நீரவ் மோடி, புஜ்பல் வழக்கு ஆவணங்கள் நாசம் என தகவல் தெரிவித்துள்ளனர். தெற்கு மும்பை பல்லார்டு எஸ்டேட்டில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 4-வது மாடியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து! மும்பையில்  அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டிடத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று (ஏப். 27) அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து, தகவலறிந்ததும் தீயணைப்புத் துறையினா் 12 வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.  தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தீ விபத்தால் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் எதுமில்லை. ​இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.21 மணியளவில் தீயின் தீவிரம் மூன்றாவது மாடிக்கு பரவியது. அமலாக்கத்துறையின் அலுவலகமானது ஐந்து மாடிக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்றுகள் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்க வாய்ப்புள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி கடன் பெற்று மெகுல் சோக்சி மோசடி செய்தவர் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தேடப்படுபவர் வைர வியாபாரி நீரவ் மோடி. 4வது மாடியில் வைக்கப்பட்டிருந்த சோக்சி, நீரவ் மோடி வழக்கு ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். மராட்டிய அரசியல் தலைவர்கள் சகன் புஜ்பல், அனில் தேஷ்முக் வழக்கு ஆவணங்களும் சேதம் அடைந்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை!

MUST READ