அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சேவையில் உள்ள உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும் என மத்திய அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!
இந்தியாவில் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கக் கூடிய திட்டங்கள், மத்திய அரசிடம் உள்ளதா? என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், நடப்பாண்டில் 729 உள்நாட்டு விமானச் சேவைக்கான உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சேவையில் உள்ள உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.