Homeசெய்திகள்தமிழ்நாடு"தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?"- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

-

 

"கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்"- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Photo: Chennai High Court

கையப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிர் செய்ய அனுமதித்துவிட்டு, தற்போது தேவையில்லாதப் பிரச்சனையை என்.எல்.சி. நிறுவனம் உருவாக்கி இருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி, பயிர் அறுவடை முடியும் வரை இடையூறு செய்யக்கூடாது என என்.எல்.சி. நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, “கையகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும், அதனை பயன்படுத்தாவிட்டால், வாங்கியவரிடமே திருப்பி ஒப்படைக்க சட்டப்பிரிவு 101 வழி வகுக்கிறது. அந்த அடிப்படையில், நிலத்தை ஒப்படைக்க என்.எல்.சி.க்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “நில ஆர்ஜிதம் தொடர்பான பழைய சட்டப்பிரிவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, புதிய சட்டத்தில் உள்ள சலுகையைக் கோர முடியாது” என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், விவசாயிகள் மூலம் அரசியல் கட்சியினர் பிரச்சனையைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டினார். மின்தேவையை ஈடுகட்ட போதுமான நிலக்கரி இல்லாததால், கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்த சுந்தரேஷன், “கால்வாய் அமைக்கும் ஒன்றரை கிலோ மீட்டரில் பயிர்கள் எதுவும் இல்லை” என்று வாதிட்டார்.

பயிரிடப்பட்டதை பொக்லைன் மூலம் அழித்து விட்டு, தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அத்துடன், வேலி அமைக்காமல், பயிர் செய்ய அனுமதித்துவிட்டு, தற்போது தேவையில்லாத பிரச்சனையை என்.எல்.சி. உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

என்.எல்.சி.யில் வட மாநிலத்தவர்களே அதிகமாகப் பணியமர்த்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, “நாட்டைப் பிரித்துப் பார்ப்பதை ஏற்க முடியாது. நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வட மாநிலங்களுக்கு சென்று பிரகாசித்து வருகின்றனர்” என்றார்.

என்.எல்.சி. குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், என்.எல்.சி.க்கும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். என்.எல்.சி. விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அரசியல் கட்சியை அரசியல் செய்யக் கூடாது என சொல்ல முடியாது எனக் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

MUST READ