இந்தியாவின் முன்னணி AI- தொழிநுட்பத்தில் இன்னோவேஷன் (VerSe Innovation), தனது நிறுவன நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பி.ஆர். ரமேஷ் அவர்களைத் தனது வாரியத்தின் இயக்குநராகவும் (Independent Director), தணிக்கைக் குழுவின் தலைவராகவும் (Chair of the Audit Committee) நியமிப்பதாக நேற்று (மார்ச் 31, 2026) அறிவித்துள்ளது.
ஜோஷ் (Josh), மேக்ஸ்டர் (Magzter) மற்றும் NexVerse.ai ஆகிய தளங்களின் தாய் நிறுவனமான வெர்ஸ் இன்னோவேஷன், தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகரும் வேளையில் இந்த புதிய இயக்குனர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுமை மற்றும் அனுபவம்
புதியதாக நியமிக்கப்பட்ட இயக்குநர் பி.ஆர். ரமேஷ் நிதி மேலாண்மை, கார்ப்பரேட் ஆளுமை மற்றும் ஒழுங்குமுறை ஆலோசனைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) ஆவார். இவர் முன்னதாக டெலாய்ட் இந்தியா (Deloitte India) நிறுவனத்தின் தலைவராகவும், டெலாய்ட் குளோபல் வாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில் சில
ஏர் இந்தியா, சிப்லா, நெஸ்லே இந்தியா, எல்& டி (L&T) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் வாரியங்களில் பணியாற்றியுள்ளார். செபி (SEBI), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் ஐஆர்டிஏ (IRDA) ஆகிய அமைப்புகளின் முக்கியக் குழுக்களில் பங்கேற்று இந்தியாவின் நிதி நிலைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். 2022-23 ஆம் ஆண்டிற்கான “சிறந்த சுதந்திர இயக்குநர்” (Best Independent Director) விருதை ஆசிய கார்ப்பரேட் ஆளுமை மற்றும் நிலைத்தன்மை மையத்திடமிருந்து பெற்றுள்ளார்.
நிர்வாகத்தின் கருத்து
இந்த நியமனம் குறித்து வெர்ஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர் உமாங் பேடி கூறுகையில்:
”ஒரு நிறுவனம் காலத்தை வென்று நிலைத்து நிற்க வலுவான நிர்வாகமும், நிதி ஒழுக்கமும் மிக அவசியம். பி.ஆர். ரமேஷ் அவர்களின் வருகை எங்களது நிர்வாகத் தரத்தை மேம்படுத்துவதோடு, முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.”
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பி.ஆர். ரமேஷ் பேசுகையில்,
”வெர்ஸ் நிறுவனம் இந்தியாவின் டிஜிட்டல் தளத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. அந்த வளர்ச்சிக்கு இணையாக நிறுவனத்தின் நிதி கட்டுப்பாடுகள் மற்றும் இடர் மேலாண்மை அமைப்புகளும் வலுவாக இருப்பதை உறுதி செய்வது அவசியம். அந்தப் பொறுப்பை செவ்வனே செய்ய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கிடையே உள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க முடியும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு VerSe Innovation நிறுவனம் இயங்குகிறது. தொடக்கத்திலிருந்தே, மில்லியன் கணக்கான நுகர்வோரின் உள்ளடக்கத் (Content) தேவைகளைத் தொழில்நுட்பம் மூலம் கையாண்டு முன்னுக்கு வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் தனித்துவமான செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் ஆழ்ந்த கற்றல் (Deep Learning) தொழில்நுட்பங்கள், பயனர்களின் விருப்பத்திற்கேற்ப உள்ளடக்கத்தை வழங்குகின்றன.
கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்களது சொந்த மொழியில் செய்திகள் மற்றும் தகவல்களைப் பெற இதன் தொழில்நுட்பம் உதவுகிறது. இந்தியாவின் முதன்மையான மற்றும் அதிக ஈடுபாடு கொண்ட படைப்பாளிகளுக்கான செயலியான ‘Josh’-ஐயும் இது இயக்குகிறது.
Josh-ன் ஆடியோ காலிங் மற்றும் ஆடியோ கதைகள், மற்றும் VerSe Collab போன்ற AI-சார்ந்த தளங்கள் மூலம் நுகர்வோர் மற்றும் பிராண்டுகளுக்கு இடையிலான தொடர்பை இது மறுசீரமைக்கிறது.
உள்ளூர் மொழிகளுக்கான தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முதல் யுனிகார்ன் (Unicorn) என்ற பெருமையை VerSe Innovation பெற்றுள்ளது.
முக்கிய முதலீட்டாளர்கள்:
இந்நிறுவனத்தில் CPP Investments, OTPP, QIA, கூகுள் (Google), மைக்ரோசாப்ட் (Microsoft), கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), செக்வோயா கேபிடல் இந்தியா (Sequoia Capital India) மற்றும் மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா (Matrix Partners India) உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
