
நாடு முழுவதும் அண்மைக் காலமாக 16 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்களும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
அண்மையில் குஜராத் மாநிலத்தில் கர்பா நடனத்தில் பங்கேற்றவர்களில் 10- க்கும் மேற்பட்டோர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தனர். இந்த சூழலில், குஜராத் மாநிலம், பாஹ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, மாரடைப்புக் காரணமாக, பலர் உயிரிழந்து வருவது குறித்து ஐசிஎம்ஆர் தீவிர ஆய்வு நடத்தியதாகப் பதிலளித்தார்.
எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது காலணி வீச்சு!
அதன்படி, தீவிர கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் கடினமான வேலை, கடுமையான உடற்பயிற்சி, மிக வேகமாக ஓடுவது உள்ளிட்டவற்றை ஒன்று (அல்லது) இரண்டு ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என்றும், இதனால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனக் கூறினார்.