Homeசெய்திகள்இந்தியாகடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

-

 

டெல்லி பாலம் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பார்வை நிலை பூஜ்ஜியமாக உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங் பகுதியில் பார்வை நிலை 200 மீட்டராக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?

கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களுக்கு இன்று (ஜன.12) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இன்றும், நாளையும் பனிமூட்டம் நிலவும்; ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் அடர் பனி நீடிக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் குளிர் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் தழுதாழை மூலிகை!

டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவுக் காரணமாக 23 ரயில்களின் வருகை தாமதமாகியுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக, வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

MUST READ