spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது- நடந்தது என்ன?

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது- நடந்தது என்ன?

-

- Advertisement -

 

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது- நடந்தது என்ன?

we-r-hiring

அமலாக்கத்துறையின் விசாரணை முதல் ஹேமந்த் சோரன் கைது வரை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

நேற்று (ஜன.31) மதியம் 12.46 மணிக்கு ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்திற்கு ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். மதியம் 12.58 மணிக்கு ஹேமந்த் சோரனின் இல்லத்தைச் சுற்றி கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மதியம் 01.33 மணிக்கு ஹேமந்த் சோரனின் இல்லத்திற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர்.

பிற்பகல் 03.48 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது துவாரகா காவல் நிலையத்தில் ஹேமந்த் சோரன் தரப்பினர் புகார் அளித்திருந்தனர். இரவு 08.35 மணிக்கு ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதை அறிந்ததால் போக்குவரத்துத் துறை அமைச்சர் சம்பாய் சோரன் அடுத்த முதலமைச்சராகத் தேர்வுச் செய்யப்பட்டார். சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவு 08.46 மணிக்கு புறப்பட்டனர்.

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

இரவு 08.57 மணிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். இரவு 09.05 மணிக்கு ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஹேமந்த் சோரன். அதைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

MUST READ