ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களுரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்
மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி கடந்த 2006 முதல் 2008ஆம் ஆண்டு வரை கர்நாடக முதலமைச்சராக இருந்தபோது, பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு 550 ஏக்கர் சுரங்க குத்தகைக்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற மேற்பார்வையில் ஏ.டி.ஜி.பி சந்திரசேகர் விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில், சுரங்க முறைகேடு வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ஏடிஜிபி சந்திரசேகருக்கு, மத்திய அமைச்சர் குமாரசாமி மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெங்களுரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிக்கில் குமாரசாமி உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.