spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில்...

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை -ப.சிதம்பரம்

-

- Advertisement -

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை -ப.சிதம்பரம்மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு.பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது, “இந்தியாவின் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப் படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் என்று பணிவுடன் சொல்ல விரும்புகிறேன். பல இந்தி பேசும் மாநிலங்கள்— குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில்  உள்ள பல அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆங்கில வகுப்புகளை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும் வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அவர்களால் ஒரு வாசகத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுத முடியாது.

we-r-hiring

தமிழ் நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள், CBSE, ICSE பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் KV பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தி. தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது. தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் பல நிலைத் தேர்வுகளை ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆளுநர் அவர்கள் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

தாய்மொழி பற்றை இனவாதம் என்பதா? ஆளுநருக்கு முதலமைச்சர் கேள்வி

MUST READ