Homeசெய்திகள்இந்தியாஇடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

-

- Advertisement -

 

நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்யவுள்ளார்.

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

நடப்பாண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவரின் உரையுடன் நேற்று (ஜன.31) தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.01) மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஆறாவது மத்திய பட்ஜெட் இதுவாகும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகத் தாக்கல் செய்யப்பட இடைக்கால பட்ஜெட் என்பதால், இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

அதன்படி, விவசாயம், வரிக்குறைப்பு, பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழில்துறையினரை கவரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உள்ள நூலகக் கட்டிடத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைக்குமாறு அனைத்துக் கட்சியினரிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

MUST READ