Homeசெய்திகள்இந்தியாஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

-

ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.

இதேபோல், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தெரிவித்தார். ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனிடையே, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் வரை பதவிக்காலம் உள்ளதால் தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையுடன் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தெரிவித்தார்.

விக்ரமை தொடர்ந்து வயநாடு மீட்பு பணிக்கு நிதி வழங்கிய பிரபல நடிகர்கள்!

இதேபோல் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், அத்தொகுதி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ