Homeசெய்திகள்இந்தியாபாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர், நடிகைகளின் நிலைமை

பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர், நடிகைகளின் நிலைமை

-

- Advertisement -
18வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த மக்களவை தேர்தலில் பல நடிகர், நடிகைகளும் பாஜக சார்பில் களத்தில் இறங்கினர். தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். அதேபோல, கேரள மாநிலம் திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டார். ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் போட்டியிட்டார். இதில் திருச்சூரில் போட்டியிட்ட சுரேஷ் கோபி தொடக்கத்தில் பின்னடைச் சந்தித்த நிலையில், தற்போது, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல, கங்கனா ரணாவத்தும் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதே சமயம், விருதுநகரில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் பின்னடவைச் சந்தித்தார்.

MUST READ