spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!

கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!

-

- Advertisement -

 

கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!
File Photo

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. அதேபோல், பா.ஜ.க. 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், கல்யாண ராஜிய பிரகதி பக்ஷ ஒரு தொகுதியிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷ ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

we-r-hiring

கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

காங்கிரஸ் கட்சி 42.88%, பா.ஜ.க. 36.00%, மதச்சார்பற்ற ஜனதா தளம் 13.29%, ஆம் ஆத்மி 0.58%, பகுஜன் சமாஜ் கட்சி 0.31%, நோட்டாவுக்கு 0.69% வாக்குகளும் பெற்றுள்ளன. பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே 6% வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஆகும்.

கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு

கர்நாடகா மாநிலத்தில் தனிநபர் சராசரி வருமானம் குறைந்தோர் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களும், தனிநபர் சராசரி வருமானம் அதிகம் உள்ளவர்கள் பகுதிகளில் பா.ஜ.க.வுக்கு அதிக இடங்களும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ