spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது - பயணிகள் காயம்!

கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது – பயணிகள் காயம்!

-

- Advertisement -

Accident

கேரள மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த பயணிகள் காயம் அடைந்தனர்.

we-r-hiring

கேரள மாநிலம் மலப்புரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து தாறுமாறாக ஓடியுள்ளது. இறுதியில் கொண்டேட்டி தனலஸ் சாலை சந்திப்பில் உள்ள டிவைடரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து நடைபெற்றது ஞாயிற்றுக் கிழமை என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த பேருந்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

MUST READ