ரயிலில் தீ வைத்தால் நல்ல காலம் பிறக்கும்! குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்
கேரளாவில் ரயிலில் தீ வைத்ததாக கைதான ஷாருக் சைஃபி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு நபர் தனது சக பயணியை தீ வைத்து எரித்ததில் 8 பேர் தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் நடந்தது. இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ரயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 2 வயது குழந்தை உட்பட 3 பேரின் உடல்கள் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டன.

கேரளாவில் ரயிலில் எரிபொருளை ஊற்றி தீ வைத்த குற்றவாளி முஹம்மது ஷாரூக் ஷஃபி மகாராஷ்டிர மாநிலம் இரத்னகிரியில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என மர்ம நபர் ஒருவர் வழங்கிய அறிவுறுத்தலால் தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பயணிகள் மீது தீ வைத்தால் நன்மை நடக்கும் என்பதை நம்பி தீ வைத்தேன் என்றும், தீ வைத்துவிட்டு 2 பெட்டிகள் மாறி அமர்ந்திருந்தேன் என்றும் ஷாரூக் ஷஃபி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தீவைத்த பின் அதே ரயிலில் வேறு பெட்டியில் ஏறி கண்ணூர் சென்றாதாகவும் போலீசில் ஷாருக் சைஃபி தெரிவித்துள்ளார்.


