Homeசெய்திகள்இந்தியாஇன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!

இன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!

-

 

வயநாடு தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தம்!
File Photo

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அல்லது நாளை (மார்ச் 16) அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் – ஜவாஹிருல்லா

நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. எனினும், இந்திய தேர்தல் ஆணையர் பதவி இடங்கள் காலியாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்றுக் கொண்ட இருவரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்த சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அல்லது நாளை (மார்ச் 16) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர்.

சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி எப்போதும் வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

MUST READ