Homeசெய்திகள்இந்தியாஆந்திர பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் - வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஆந்திர பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு விறுவிறுப்பு

-

ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதேபோல் மூன்றாம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 07ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

'மக்களவைத் தேர்தல் 2024'- காலை 11.00 மணி நிலவரம்....தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!

இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் ஒய்.எஸ்.சர்மிளா தலைமையில் களமிறங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 4.14 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.02 கோடி ஆண்கள், 2.1 கோடி பெண்கள், 3,421 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

 

MUST READ