Homeசெய்திகள்இந்தியா‘Money Heist’ முகமூடி அணிந்து பணத்தை சாலையில் வீசி எறிந்த மர்ம நபர்!

‘Money Heist’ முகமூடி அணிந்து பணத்தை சாலையில் வீசி எறிந்த மர்ம நபர்!

-

- Advertisement -

‘Money Heist’ முகமூடி அணிந்து பணத்தை சாலையில் வீசி எறிந்த மர்ம நபர்!

‘Money Heist’ இணைய தொடரில் வரும் கதாபாத்திரத்தை போல முகமூடி அணிந்து வாலிபர் ஒருவர் காரின் மேல் நின்று ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த சம்பவம் ஜெய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video: Man Dressed In Money Heist Costume Showers Money In Jaipur

ஜெய்ப்பூர் மாளவியா நகரில் உள்ள வெஸ்ட் சைட் மாலுக்கு வெளியே நேற்று மாலை ‘Money Heist’ இணைய தொடரில் வரும் கதாபாத்திரத்தை போல முகமூடி அணிந்து வாலிபர் ஒருவர், காரின் மீது நின்று 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை வீசினார். அதனை எடுப்பதற்கு சாலைகளில் மக்கள் கூட்டம் திரண்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட நபர் கருப்பு நிற காரில் நின்றுகொண்டு, சிவப்பு நிற ஆடை அணிந்து, பிளாஸ்டிக் முகமூடி அணிந்து பணத்தை வாரி இரைத்துள்ளார்.

இச்சம்பவம் வைரலானதை அடுத்து, அமைதியை குலைத்த குற்றச்சாட்டின் பேரில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

MUST READ