spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை!!

ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை!!

-

- Advertisement -

உத்திரப் பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை!!அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்திரப் பிரதேச அரசு ஜாதி ரீதியிலான கூட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாதி, போலீஸ் ஆவணங்களில் பதிவு செய்யப்படக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதிய உத்தரவின்படி வாகனங்களில் ஜாதியை வெளிப்படுத்தும் வாசகங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் குற்றத்தடுப்பு மற்றும் கண்காணிப்பு இணையதளத்தில் ஜாதி தொடர்பான விவரம் குறிப்பிடும் பகுதியை நீக்கவும் உத்தரவிடப்பட்டது. கிராமம் மற்றும் நகரங்களில் ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் வாசகங்களுடன் கூடிய பெயர்ப் பலகைகளை அகற்றிடவும் உத்தரவிட்டது. இதனால் பல்வேறு கட்சிகளும் எதிா்ப்பு தொிவித்து வரும் நிலையில், உத்திர பிரதேச அரசின் தடை உத்தரவுக்கு சமாஜ்வாதி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

we-r-hiring

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் அரசின் உத்தரவுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் மனங்களில் 5,000 ஆண்டுகளாக நிறைந்திருக்கிற ஜாதி பேதத்தை எவ்வாறு அழிக்கப்போகிறீர்கள் என்று அகிலேஷ் கேள்வி எழுப்பினார். வடமாநிலங்களில் பெயரை கேட்கும் முன் அவரது ஜாதியை கேட்கும் பழக்கத்தை எப்படி அகற்றப் போகிறீர்கள் என்றும் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.

200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம்… மண், மொழி, மானம் காப்போம்… துணை முதல்வர் சூளுரை…

MUST READ