Homeசெய்திகள்இந்தியா"மணிப்பூர் கலவரம்- விசாரணை ஆணையம் அமைப்பு": மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

“மணிப்பூர் கலவரம்- விசாரணை ஆணையம் அமைப்பு”: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

-

 

"மணிப்பூர் கலவரம்- விசாரணை ஆணையம் அமைப்பு": மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!
Photo: ANI

கலவரம் தொடர்பான நிலவரம் குறித்து ஆராய மணிப்பூருக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மற்றும் அரசு உயரதிகாரிகள், சமூக அமைப்புகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினர். மேலும், பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

இந்த நிலையில், இம்பாலில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமித்ஷா, “மணிப்பூர் கலவர வழக்கில் ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆறு வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும். மணிப்பூர் ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் கொண்ட அமைதிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் காயமடைந்தோர், சொத்துகளை இழந்தோருக்கு நிவாரணம் நாளை அறிவிக்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐந்து மருத்துவக் குழுக்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று மருத்துவக் குழுவினர் வந்துக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு கல்வியைத் தடையின்றி வழங்கும் வகையில், ஆன்லைன் மூலம் கல்விக் கற்பிக்கவும், தேர்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஆயுதங்களை யாரேனும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தால், அதை உடனே ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி!

பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக, மைத்தேயி மற்றும் குகி இன மக்களிடையே மோதல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ