
மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு குற்றம் இழைத்த நான்கு பேரை 11 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக, இரு இனக் குழுக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் வன்முறையின் உச்சக்கட்டமாக, இரண்டு பெண்கள் ஆடைகளின்றி அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும், கடும் கண்டனங்கள் வந்தன.
விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?
இந்த சம்பத்தில் ஈடுபட்ட 4 பேரை மணிப்பூர் மாநில காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரையும் 11 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.