Homeசெய்திகள்இந்தியாஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் - காங்கிரஸ்

ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் – காங்கிரஸ்

-

ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் – காங்கிரஸ்

ஜி20 மாநாடுக்கு வரும் உலக தலைவர்களின் கண்ணில் படாமல் இருப்பதற்காக குடிசை பகுதிகளை துணியால் மூடி மறைத்த பிரதமர் மோடி ஏழைகளை வெறுக்கிறார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஜி20 மாநாட்டிற்காக பல உலக தலைவர்கள் வந்துள்ள நிலையில், டெல்லியில் சில இடங்களில் சாலையோரம் உள்ள குடிசை பகுதிகள் பச்சை துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. மேலும், தெருவில் சுற்றித்திரிந்த பல தெரு நாய்கள் பிடித்துச்  செல்லப்பட்டுள்ளன.

ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் - காங்கிரஸ்

பாஜக அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டரில், ஒன்றிய அரசு நமது ஏழை மக்களையும், விலங்குகளையும் மறைக்கிறது. இந்தியாவின் யதார்த்தமான நமது விருந்தினர்களிடமிருந்து மறைக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.

ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் - காங்கிரஸ்

காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், குடிசை பகுதிகள் பச்சை துணியால் மூடப்பட்டிருப்பது, தெரு நாய்கள் கொடூரமாக பிடித்து கொல்லப்படுவதையும் காட்டுகிறது. அதில் குடிசைவாசிகள் பேசுகையில், எங்களை அரசு பூச்சிகளாக கருதுகிறது. நாங்களும் மனிதர்கள் இல்லையா? என கேள்வி கேட்கின்றனர். இந்த வீடியோவுடன் காங்கிரஸ் கட்சி, ஜி20 மாநாட்டிற்கு முன்பாக அனைத்து குடிசை பகுதிகளையும் மூடி, மோடி அரசு தனது தோல்வியை மறைக்கிறது.

ஏனெனில், மன்னர் ஏழைகளை வெறுக்கிறார். நாய்கள், கழுத்தில் இறுக்கப்பட்டு குச்சிகளால் அடித்து கூண்டுகளில் வீசப்படுகின்றன. அவைகளுக்கு உணவு, தண்ணீர் மறுக்கப்படுகிறது. இது போன்ற கொடூரமான செயல்களுக்கு எதிராக நாம் குரலற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோருவது அவசியம் என பதிவிட்டுள்ளது.

MUST READ