நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆலோசனை கூட்டம் நடத்தபட உள்ளது. அந்த கூட்டத்தில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் கட்சி தலைமையை குறிவைப்பதற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நாளை ஆலோசனை நடத்த உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்க துறை, டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை பற்றி விவாதிக்க காங்கிரஸ் கட்சி தனது பொதுச்செயலாளர்கள், துணை அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசிக்க நாளை ஏற்பாடு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் சுற்றறிக்கை விடுத்துள்ளாா். அதில், நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் கட்சி தலைமையை குறிவைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் அழுகிறார்கள் என்று கூறிய மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி