திமுக ஆட்சி மீது எந்தக் குறையும் சொல்ல முடியாததால், சிலர் அவதூறு பரப்புகின்றனர். சட்டம் – ஒழுங்கு, நிர்வாகம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகின்றன. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்தோடு உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்க முயற்சிக்கின்றனர்.
நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழித் திட்டம் நிராகரிப்பு , வக்ஃப் சட்டம் எதிர்ப்பு என இந்திய அளவில் ஓங்கி குரல் கொடுக்கின்றது திமுக. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படையும் மாநிலங்களை ஒன்று திரட்டி வலுவாக குரல் கொடுக்கும் இயக்கம் தான் திமுக. மாநில உரிமையின் அகில இந்திய முகமாக உள்ளது தி.மு.க. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது
மாநில மக்களின் விருப்பத்தை மதிக்காத, சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை மதிக்காத ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வாங்கியுள்ளோம். தி.மு.க.வோட ‘பவர்’ என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்லாருக்குமே தெரிந்துள்ளது.
நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு தருவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் சொல்ல முடியவில்லை. இந்தியை திணிக்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் உறுதியளிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என அமித்ஷாவால் பட்டியல் போட முடியுமா?
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டோட பிரதிநிதித்துவம் குறையாது என அமித்ஷாவால் வாக்குறுதி கொடுக்க முடியவில்லை. ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா? என கேட்டது நீங்கள்தானே? – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பதிலடி
2011-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தது மோடி தானே?
ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் நடத்துகின்றனர் என புகார் சொன்னது மோடி தானே?
நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழ்நாட்டின் உரிமை! என்று தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் அழுகிறார்கள் என பிரதமர் பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளாா்.
”முதல்வர் மருந்தகத்தில்” மருந்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – மா.சுப்ரமணியன் உறுதி