Homeசெய்திகள்இந்தியாதேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!

-

 

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!
File Photo

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம், ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

அதன்படி, சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் டெல்லி ஐ.ஐ.டி. இரண்டாவது இடத்திலும், மும்பை ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கானப் பட்டியலில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதலிடத்திலும், சண்டிகரில் உள்ள பிக்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இரண்டாவது இடத்திலும், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கல்லூரிகளில் டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்திலும், சென்னையில் உள்ள மாநில கல்லூரி இரண்டாவது இடத்திலும், கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி நான்காவது இடத்திலும், சென்னை லயோலா கல்லூரி ஏழாவது இடத்திலும் உள்ளன.

ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பிரிவில், பெங்களூரு ஐ.ஐ.எஸ். கல்லூரி முதலிடத்திலும், புத்தாக்கம் படிப்பதில் ஐ.ஐ.டி. கான்பூர் முதலிடத்திலும், சட்டப்படிப்பில் பெங்களூரு இந்திய சட்டப்பள்ளி முதலிடத்திலும் உள்ளன.

சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!

சிறந்த வேளாண் கல்வி நிறுவனங்கள் பிரிவில், டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்திலும், கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

MUST READ